Translate

Friday, September 6, 2013

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjRjVAUx8XmmFxk8G1VEa6CZBOhKhCIxrUwsTmmkU8CUwiFW8fVFCJC5btGQv62SLq7s4s469GFSWo44FD_ejFk9lly7LKLlODaZQfqGTTvf_XnoIM90xeP9By5g1Q4JSbCyShIaFyOYm4A/s640/poet.png

Wednesday, September 4, 2013

 

கோகுலாஷ்டமி :

அஷ்டமி, நவமி இந்த இரண்டு நாட்களிலும் பொதுவாக மக்கள் சுபகாரியங்கள் எதுவும் செய்வதில்லை.இதனால் வருத்தம் அடைந்த அந்த இரண்டு திதிகளும் ஸ்ரீவைகுண்டம் சென்று பெருமாளிடம் முறையிட்டனவாம், "இறைவா! மக்கள் எங்களை கெட்ட திதிகளாக நினைத்து ஒதுக்குகிறார்கள், எங்களுக்கு ஒரு விமோட்சனம் தாருங்கள்" என்று வேண்டினவாம். அப்பொழுது பெருமாள் தம் அவதாரங்களால் அஷ்டமியையும் நவமியையும் கௌரவிப்பதாக வாக்களித்தார். அதன்படி கிருஷ்ணாவதாரம் அஷ்டமியிலும் ராமவதாரம் நவமியிலும் ஏற்பட்டது. மக்களும் கோகுலாஷ்டமி என்றும் ராமநவமி என்றும் இந்த இரு திதிகளையும் கொண்டாடி வருகின்றனர்.
இது அனைவரும் அறிந்ததே. ஆனால் உண்மையை ஆராய்ந்து பார்த்தால் அஷ்டமி நவமி நாட்களில் செய்யும் எந்த செயலும் நல்லபடியாக வளர்ச்சி அடையாதா? அல்லது இது வெறும் மூட நம்பிக்கையா?
என் ஆராய்ச்சியில் நான் கண்ட ஒரு விவரம்:
               அஷ்டம் என்றால் எண் எட்டை குறிப்பதாகும் நவம் என்றால் எண் ஒன்பதை குறிப்பதாகும். நாம் அனைவரும் சிறு வயதில் கணக்கு வாய்பாடு படித்திருப்போம். அதில் எட்டாம் வாய்பாடு மற்றும் ஒன்பதாம் வாய்ப்பாடு  பார்த்தல்
8x1=8                    9x1=9
8x2=16                  9x2=18
8x3=24                  9x3=27
8x4=32                  9x4=36
8x5=40                  9x5=45
8x6=48                  9x6=54
8x7=56                  9x7=63
8x8=64                  9x8=72
8x9=72                  9x9=81
8x10=80                9x10=90
         
          எட்டாம் வாய்ப்பாட்டில் வரும் எண்களின் கூட்டு தொகை குறைந்து கொண்டே செல்கிறது ஒன்பதாம் வாய்ப்பாட்டில் வரும் எண்களின் கூட்டு தொகையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை ஆனால் மற்ற பிற எண்களின் வாய்ப்பாட்டில் வரும் எண்களின் கூட்டு தொகையில் ஏற்றமும் உள்ளது இறக்கமும் உள்ளது. 
எனவே தான் மக்கள் அஷ்டமியில் ஆரம்பிக்கிற காரியங்கள்  சரிவை நோக்கியே செல்லும் என்றும் நவமியில் செய்யும் காரியங்கள் முன்னேற்றம் அடையாது  என்றும் நினைத்து ஒதுக்குகிறார்களோ?????
மூடநம்பிக்கைக்கு விஞ்ஞான விளக்கம் கொடுப்பது சரியாகுமா?

எல்லா நாளும் நல்ல நாளே.... உழைப்பே உயர்வு தரும்.... என்பதை உலகுக்கு உணர்த்த தான் இறைவன் தன்னுடைய அவதாரத்தை இந்த நாட்களில் மேற்கொண்டிருக்கிறார்...


Friday, August 16, 2013

 

 அன்பு...

உருவம் இல்லாத ஒன்று..
உலகை ஆளுவதென்றால்...
அது ...!
அன்பாக மட்டுமே இருக்க முடியும்...!!!

Wednesday, August 14, 2013


67வது சுதந்திர தின வாழ்த்துக்கள்  
அனைவருக்கும் வணக்கம்